அவர் குழம்பிப் போயுள்ளார்! திருமாவளவனை சாடிய நாராயணன் திருப்பதி!

0
200

திருமாவளவனை எடுத்துக் கொண்டால் அவர் திமுக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்து நிலைபெற்று வருகிறார். மற்ற கட்சியினரை விட இவர் மிகவும் வித்தியாசமாக செயல்படுவார்.

ஆனால் அந்த கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான். இந்து மத மறுப்பு கொள்கை மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதுதான் அந்த ஒட்டுமொத்த கூட்டணியின் கொள்கையாக இருந்து வருகிறது.

ஆனால் தமிழக மக்களிடையே இந்து மத மறுப்பு கொள்கைக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து மத பற்றுடைய அமைப்புகளுக்கு எதிராகவும் ஒரு வெறுப்பு அரசியலை பரப்புவது திருமாவளவன் மற்றும் கி வீரமணி போன்றோர் தான்.

இப்படி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டிவிட்டு அதன் மூலமாக அரசியல் லாபம் பார்த்து வருகிறது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்.

இந்த நிலையில் தமிழக பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு, வைணவம் வேறு, திருநீறு பட்டை வேறு, திருமண் நாமம் வேறு இரண்டும் மோதிக்கொண்டனர்.

அந்த காலத்தில் ஏது ஹிந்து இந்த காலத்து லிங்காயத்துக்களை தாங்கள் ஹிந்து இல்லை என்று உரக்க சொல்கிறார்கள். இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குனர் வெற்றிமாறன் என்கிறார் திருமாவளவன். இதை தானே நாமும் சொல்லி வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.

ஹிந்து என்பது ஒரு மதம் அல்ல, வாழ்வியல் முறை. இந்தியா என்ற ஹிந்துஸ்தானத்தில் இருக்கின்ற எல்லோரும் ஹிந்துக்கள் தான் என்றே நாம் சொல்கிறோம். நீங்கள் தெரிவிப்பது போல சைவமும், வைணவமும் மோதிக்கொண்டதாகவே இருக்கட்டும். அந்த மோதலை தடுத்து இணைத்தது ஹிந்து என்ற சொல் தானே.

மண்ணையும், கல்லையும்,புல்லையும், மரத்தையும், கண்ணுக்கு தெரியாதவையையும், மனதிற்கு பிடித்ததையும் வழிபடும் நம்பிக்கையின் அடிப்படையில் அழிவில்லாத, நிலையான சனாதன தர்மம் என்ற இன்றைய அமைதியான, நிலையான, உண்மையான தர்மத்தை நெறியை போதிக்கிறது.

ஹிந்து தர்மம் என்ற கலாச்சாரம் தேவையில்லாததை படித்து குழம்பி போய் உள்ளீர்கள் திருமாவளவன் அவர்களே. தெளிவு பெறுங்கள். வெறுப்பு அரசியலை கைவிடுங்கள் என்று நாராயணன் திருப்பதி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபதவி உயர்வை மறக்கும் கூட்டுறவு சங்க உதவி செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
Next articleஇந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு!