இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு!

0
100
This type of environment does not exist in any regime! Allegation of ministers!
This type of environment does not exist in any regime! Allegation of ministers!

இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன் ,மா சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வின் பொழுது அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை அதனால் பணியில் இருந்த வட்டார அலுவலர் உள்பட இரண்டு பேர்கள் பணியிட மாற்றாம் செய்யப்பட்டனர்.மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி இல்லை என குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகள்,மயக்க மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை  மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்து வருகின்றது.இந்நிலையில் இந்த விவகாரத்தை பொது வெளியில் கூறி அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என நினைத்தோம் ஆனால் மருந்து இல்லாததற்கு மருத்துவர்கள் நடுவில் மாட்டிக்கொள்கின்றனர் அதனால் தான் இவ்வாறன குற்றச்சாட்டு கூறப்படுகின்றது என விளக்கம் அளித்தார்.

மேலும் மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி இல்லாதது,கட்டிடம் பழுது உள்ளிட்டவற்றுக்கு மருத்துவர்கள் மீது பழி சுமத்துவது இதுவரை நடந்த எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை எனவும் கூறினார்கள்.அதனையடுத்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாததால் அதிக பணிச்சுமையுடன் ,விடுப்பு கூட எடுக்க முடியாத நிலையில் மருத்துவர்கள் இருகின்றனர்.இந்த சூழலில் மருத்துவர்களுக்கு அரசு தரப்பில் மேலும் நெருக்கடி தருவது ,பழி வாங்குவது வேதனையை தருகின்றது என கூறினார்.

author avatar
Parthipan K