விஜயகாந்த் ஆத்மா தான் இவரு!! இறுதி சடங்கு வேலையை இவர் தான் செய்யணும்!!

Photo of author

By Gayathri

விஜயகாந்த் ஆத்மா தான் இவரு!! இறுதி சடங்கு வேலையை இவர் தான் செய்யணும்!!

Gayathri

vijay sethupathi

தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த முன்னாள் நடிகையான வடிவுக்கரசி ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். பல திரைப்படங்களில் இவர் வில்லி கேரக்டர்களில் வெளுத்து வாங்கி இருப்பார். சின்னத்திரைகளிலும் 40க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். அவர் தாம் விஜயகாந்தின் நற்குணங்களை அவருக்குப் பின் விஜய் சேதுபதியிடம் தான் கண்டுள்ளேன். கேப்டன் விஜயகாந்தின் ஆத்மாவாக தான் இவரை கருதுகிறேன். இதற்கு முன்னர் விஜயகாந்திடம் மட்டுமே இந்த உயரிய பண்புகளை தாம் கண்டுள்ளதாக அவர் விஜய் சேதுபதி குறித்து பெருமையாக பேசி உள்ளார். அவருடைய இயல்பான பேச்சு மற்றும் நடிப்பு கணக்கு அவர் மீது ஒரு மதிப்பு வர செய்தது என்று அவர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அந்த குழுவை சார்ந்த சுமார் 2000 நபர்களுக்கு மண்டபம் புக் செய்து சாப்பாடு வழங்கியுள்ளார். எனக்கு கடைசி காலத்தில் என் இறப்பு காரியங்களை இவர் தான் கவனிக்க வேண்டும் என்று பலமுறை அவரிடமே கூறியுள்ளேன். அதற்காக ஏம்மா இப்படி எல்லாம் சொல்றீங்க? என்று கூறுவார். என் இறுதி சடங்கு காரியங்களை விஜய் சேதுபதி தான் முழுக்க முழுக்க கவனிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் செய்யும் வேலைகள் குறித்து அவருக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். தன் மகன் செய்ய வேண்டிய உயரிய காரிய பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தும் உள்ளார்.