வாரிசு படத்தின் வில்லன் இவரா! படக்குழுவின் ரகசியம்!!

Photo of author

By Vijay

வாரிசு படத்தின் வில்லன் இவரா! படக்குழுவின் ரகசியம்!!

Vijay

Updated on:

வாரிசு படத்தின் வில்லன் இவரா! படக்குழுவின் ரகசியம்!!

விஜய் நடித்த வாரிசு படத்தின் வில்லன் பற்றிய ரகசியம் வெளியானது. இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் வாரிசு.இதில் விஜய் ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சரத்குமார்,பிரகாஷ்ராஜ்,கணேஷ் வெங்கட்ராமன்,சங்கீதா,குஷ்பூ,ஷாம்,யோகிபாபு,சம்யுக்தா, ஆகியோர் நடிக்கின்றனர்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கிறார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இந்த படம் குடும்பக்  கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாடல் ஆசிரியர் விவேக் எழுதிய ரஞ்சிதமே பாடல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை நடிகர் விஜய் உடன் இணைந்து  எம்.எம்.மானசி பாடியுள்ளார்.

மேலும் விவேக் எழுதி நடிகர் சிலம்பரசன்  பாடிய  மற்றோர் பாடலான “தீ தளபதி “ இரண்டாவது சிங்கிளாக வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படம் வெளியாகி  30 – வது ஆண்டை கடந்து விட்ட நிலையில் இந்த பாடல் வெளியானது.

இந்த படத்தில் முக்கிய வில்லன் நடிகர் யார் என்பது படக்குழுவினரால் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இப்போது இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர்க்கு பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வீடியோ காலில் வாழ்த்துக்கள் தெரிவித்த குழுவில் எஸ்.ஜே.சூர்யா –வும் இருந்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது தெரிய வந்துள்ளது. படக்குழு படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாத இறுதிக்குள் நடத்துவதற்க்கான ஏற்பாடுகளை  செய்து வரும் நிலையில் வில்லன் நடிகர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.