அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!

Photo of author

By Sakthi

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!

Sakthi

Updated on:

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டுமென்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாத வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது குறித்தான கருத்து கணிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களை விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கோவையில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் கோவையில் பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை அவர்கள் கமல்ஹாசன் அவர்களை குறித்து “கமல்ஹாசன் அவர்கள் மெண்டல் மருத்துவமனைக்கு சென்று அவருடைய மூளையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

இந்தியாவின் தலைநகர் டெல்லி தான். ஆனால் பாஜக கட்சி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்றும் என்று கமல்ஹாசன் அவர்கள் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சுயநினைவுடன் தான் இதையெல்லாம் பேசுகிறாரா அல்லது திமுக கட்சி தரும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக இப்படி பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவரை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.