தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் அரசியல் கொள்கைகளை பல லட்ச கணக்கான தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் அவர்கள் அனல் பறக்க பேசி இருப்பார். இவரின் பேச்சில் தெளிவு இருந்தது, இணையத்தில் பேசு பொருளாக மாறியது. சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி தவெக மாநாடு டிரெண்ட் ஆனது. தவெக தலைவர் விஜய் அரசியல்வாதி போல இல்லாமலும் நடிகர் போல இல்லாமலும் பேசியதை பார்த்தால் நீண்ட நாள் பயிற்சி செய்து இருப்பது நன்றாக தெரிகிறது.
அவர் எப்படி மேடையில் செயல் பட வேண்டும் , என்ன செய்ய வேண்டும், என அனைத்திற்கும் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டது, ஜான் ஆரோக்கிய சாமி தான் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் விஜய்யின்அரசியல் ஆலோசகராக செயல் பட்டுள்ளார். இவர் திருச்சி மாவட்டத்தை சேர்த்தவர். இவர் பாமகவின் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி”என்ற அரசியல் பிரச்சரத்தை கையில் எடுத்தவர் இவர் தான். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பாமக தோல்வியை அடைந்து இருந்தாலும் இந்த பிரச்சாரம் அனைவராலும் பேசப்பட்டது.
தவெகவின் கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் செய்தாலும், அரசியல் வியூகங்களை வகுத்தது இவர் தான். ஜான் ஆரோக்கிய சாமி மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ்க்கு தேர்தல் பணியை செய்து உள்ளார். அத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்றதுக்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இவரின் தவெக அரசியல் வியூகங்கள் வெற்றி பெறுமா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.