அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..

0
197

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..

 

சிவகார்த்திகேயன், நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர். இவர் முதலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர். இவர் நடிகர்களுக்கெல்லாம் துணை நடிகராக நடித்து வந்தவர்.இவர் தற்போது தானே உலகிற்கு பிடித்தமான நடிகராக மாறிவிட்டார். தற்போது வெளிவந்த டான் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.இதனை தொடர்ந்து தற்போது நடிக்கவிருக்கும்

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு நபர்களால் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசவுள்ளதாக தகவல் வெளியாவுள்ளது. சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கான நுட்பங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள். விரைவில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டான் படம் போலவே இப்படமும் நல்ல வரவேற்பு கிட்டும் என்று பட குழுவினர் கூறியிருந்தார்கள்.மேலும் அவருடைய ரசிகர்கள் அனைவருமே இந்த டப்பிங் வாய்ஸ்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Previous articleஉங்கள் பான் கார்டு தொலைந்து விட்டதா! அப்படியென்றால் உடனே இதை செய்யுங்கள் இல்லையென்றால் அவ்வளவுதான்!
Next articleதிருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்?