Head Lice & Nits: தலையில் அப்பி கிடக்கும் பேன் ஈறு அடியோடு நீங்க இந்த எண்ணெய் யூஸ் பண்ணுங்கள்! எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Divya

Head Lice & Nits: தலையில் அப்பி கிடக்கும் பேன் ஈறு அடியோடு நீங்க இந்த எண்ணெய் யூஸ் பண்ணுங்கள்! எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்!!

உங்களில் பலர் பேன்,ஈறு தொல்லையால் அவதியடைந்து வருவீர்கள்.இவை இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு ஒட்டுண்ணி ஆகும்.இவை தலையில் அதிக அரிப்பை உண்டாக்கி படுத்தி எடுக்கும்.இந்த பேன்,ஈறு தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)வேப்பிலை
3)குப்பைமேனி இலை
4)கிராம்பு
5)வெந்தயம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 4 கிராம்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆற விடவும்.

இந்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.அதேபோல் வேப்பிலை மற்றும் குப்பைமேனி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த கிராம்பு + வெந்தயப் பவுடரை போட்டு காய்ச்சவும்.அதன் பின்னர் அரைத்த வேப்பிலை மற்றும் கூப்பைமேனி இலை சேர்த்து 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.வாரம் 3 முறை இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து வந்தால் பேன்,ஈறு அடியோடு நீங்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)எலுமிச்சை சாறு
3)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் 2 பல் பூண்டை இடித்து எண்ணையில் போட்டு 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் காய்ச்சவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கவும்.பிறகு தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி கழித்து தலைக்கு குளிக்கவும்.வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் பேன்,ஈறு அடியோடு ஒழியும்.