வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்

Photo of author

By Parthipan K

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகளைக் கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம்,  காமராஜ், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் அவரை நேரில் சென்று சந்தித்து, அங்குள்ள மருத்துவர்களிடம் அவரின் உடல்நிலை குறித்து ஆலோசித்து வருகின்றனர். 

தற்போது அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம். உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வென்டிலேட்டர் கருவிகள் உபயோகித்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.