தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்து வருகிறது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போடப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு நோய்த்தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அவ்வப்போது தளர்த்தகப்பட்டு வருகிறது. இருந்தாலும் நோய் தொற்று பரவல் அபாயம் முற்றிலுமாக குறையாத நிலையில், இதுவரையிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
அதோடு தடுப்பூசி போடும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நோய் தொற்று பரிசோதனை செய்யும் வேலையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்தும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
சென்னை மயிலாப்பூரில் இருக்கின்ற c.s.i. மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பாக அவசர ஊர்தி வழங்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்தது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிரபல சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் போன்றோர் பங்கேற்றார்கள்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நடந்து வரும் நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு பல விதத்தில் உதவி புரிந்து வருகின்றன. அந்த விதத்தில் தற்சமயம் டெக் மஹிந்திரா நிறுவனம் சார்பாக மூன்று அவசர ஊர்திகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நம்மிடம் தடுப்பூசியின் கையிருப்பு குறைவாக இருந்ததால்தான் இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் 15 லட்சம் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயன்றது. கூடுதலான தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
கேரள மாநிலத்தில் நோய்த் தொற்று பாதிப்பு சதவீதம் 18 சதவீதமாக இருக்கின்ற சூழ்நிலையில், தமிழகத்தில் அது 11 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. ஆனால் தினமும் நோய்தொற்று பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவு போடப்பட்டு இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டம் கூடுவதை கடந்து எந்த ஒரு காரணத்திற்காகவும், அரசு நெறிமுறைகளை மீறி கூட்டம் கூடினால் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றும்போது, நோய்த்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை இதன் காரணமாக, எல்லோரும் கண்டிப்பாக தடுப்பூசி அளித்து கொள்ள வேண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மிகவும் கவனமுடன் பின்பற்றினால் மட்டுமே நோய் தொற்று பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.