தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் அந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர் அதோடு பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள் அதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது. மாநில அரசு இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இதன் காரணமாக, மிக விரைவில் தடுப்பூசி செலுத்துவதில் உலக அளவில் தமிழக அரசு சாதனை படைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை நேற்றையதினம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் அண்ணாநகர் சட்டசபை உறுப்பினர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றவர்கள்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் 5.4 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது சீன நாட்டிற்கு அடுத்தபடியாக 100 கோடி பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. இதற்கு ஒவ்வொரு மாநிலங்களும் சிறந்த பங்களிப்பை அளித்து இருக்கின்றன, அதேபோல தமிழகமும் பல நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவின் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட 5.4 கோடி நபர்களில் 3.91கோடி நபர்கள் முதல் தவணையும், 1.48 கோடி பேர் இரண்டாவது தவணையும், செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், உள்ளிட்டோர் பல பகுதிகளில் ஆய்வு செய்து இந்த திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்..
ஆனாலும் கூட தடுப்பூசி செலுத்துவதில் ஒரு சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய 57 லட்சம் நபர்கள் இன்னும் தடுப்பூசி சேர்த்துக்கொள்ளவில்லை இவர்களுக்காக நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாமை அதிகப்படுத்துவதுடன், இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் அமைத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதேபோல 60 வயதிருக்கும் அதிகமானோர் முதலில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திகொண்டார்கள். அவர்களுக்கும் பயம் வந்துவிட்டது போல் தெரிகிறது, அவர்களில் 47இலட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 21.65 லட்சம் நபர்கள் மட்டுமே இரண்டாவது தவணை தடுப்பூசியையும், செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, பொதுமக்களே தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து உரையாற்றிய ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 20 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 15 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். ரஷ்யா ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இதுவரையில் நோய்த்தொற்று ஏறுமுகத்தில் தான் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு அனுமதி வழங்கியதுடன் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் எவ்வாறு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதல் இடம் பிடித்தோமோ அதேபோல இதற்கு ஒப்புதல் வழங்கிய உடன் மிக விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
நோய் தொற்று மூன்றாவது அலை எந்த சமயத்தில் வரும் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை, ஆனாலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்று ஏனென்றால் மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் ஆரம்பம் ஆகலாம். இதனால் அரசு வழங்கி இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை பொதுமக்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். நோய்த்தொற்று குறைந்தவுடன் முகக் கவசம் அணிவதை மக்கள் தவிர்த்து விடுகிறார்கள் அது தவறான ஒன்று என கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
கோயம்புத்தூரில் நோய்த் தொற்று பரவல் குறைந்து வருகின்றது அதனாலும் 18 மாவட்டங்களில் பரவல் சதவீதம் ஒரு விழுக்காடு மற்றும் அதற்கு மேலே இருக்கிறது 20 மாவட்டங்களில் ஒரு சதவீதத்திற்கு கீழே இருக்கிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரையிலாவது எல்லோரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.