திடீரென்று அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த பரபரப்புக் கடிதம்!

Photo of author

By Sakthi

திடீரென்று அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த பரபரப்புக் கடிதம்!

Sakthi

கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் சீனாவில் நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த நாட்டில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்திய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலக நாடுகள் அனைத்திற்கும் பரவத்தொடங்கியது.

மேலும் உலக நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வந்த இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பலவித முயற்சிகளை மேற்கொண்டனர்.

அந்தவகையில் இந்தியாவிலும் இந்த நோய் தொற்றுபரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மத்திய, மாநில, அரசுகள் இதை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இந்த நோய் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. ஆகவே இந்தியாவில் மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் நோய்த்தொற்று பரவல் சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், தற்சமயம் அந்த நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நோய் தொற்று தடுப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த வேண்டும், முககவசம் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்டவற்றை வேகப்படுத்த வேண்டும் என்றும், கூறியிருக்கிறார்.

மேலும் புதுடில்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்டங்களின் நிர்வாகங்களுக்கு அறிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.