எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்!

Photo of author

By Pavithra

எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்!

மாறி மாறி வரும் காலநிலையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் சளி இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.அதிலும் சிலருக்கு குளிர்காலத்தில் பிடிக்கும் சளி மற்றும் இரும்பல் அவ்வளவு எளிதில் சரியாகது.
கவலை வேண்டாம் மூன்றே நாட்களில் உங்கள் சளி இரும்பல் குணமாக இது ஒன்றே போதுமானது.

டிப்ஸ்: 1

துளசி இலையை ஐந்திலிருந்து பத்து இலைகள் எடுத்து, வெற்றிலையை சேர்த்து நன்றாக கசக்கி அதன் சாற்றை எடுத்து ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எட்டு சொட்டு அளவும் ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கால் சங்கு அளவும் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அரை சங்கு அளவும் ,காலை மாலை என இருவேளையும் உணவு சாப்பிட்ட பிறகு கொடுத்து வந்தால் சளி மூன்றே நாட்களுக்குள் கட்டுக்குள் வரும்.இருமலுக்கும் இது நல்ல மருந்து.சளி நெஞ்சில் கட்டாமலும் இருக்கும்.

டிப்ஸ்: 2

துளசி இலையை எடுத்து நன்றாக கசக்கி சாறு எடுத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி இரும்பல் மூக்கடைப்பு அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும்.

டிப்ஸ்: 3

ஐந்து வெற்றிலை, ஐந்து மிளகு, அரை டீஸ்பூன் சீரகம் இவற்றை இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து வெகுவெதுப்பான சூட்டில் உணவுக்கு பிறகு குடித்து வந்தால் சளி,இரும்பல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும், நெஞ்சு சளி கரையவும் உதவும்.இதனை ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்.