ஒரே ஒரு ஸ்பூன் போதும்! சளி இருமல் உடல் சோர்வு போன்ற அனைத்துக்கும் ஒரே நாளில் தீர்வு!!
நம் உடலிருக்கு எண்ணற்ற நன்மைகள் தரக்கூடிய பனங்கற்கண்டு உபயோகப்படுத்துவதையே நாம் மறந்துவிட்டோம்.ஆனால் தினமும் ஒரே ஒரு ஸ்பூன் இந்த பனங்கற்கண்டை எடுத்துக் கொண்டால் நாம் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு ஏராளமான நன்மைகள் நம் உடலிருக்கு கிடைக்கும்.இந்த பதிவில் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிதெரிந்து கொள்ளலாம்.
சிலருக்கு பனி காலத்தில் அல்லது மழைக்காலத்தில் ஏதேனும் சிறிதளவு இனிப்பு பொருளை சாப்பிட்டால் கூட தொண்டை கரகரவென இருப்பது போல் உணர்வர்.அல்லது சிறிது தொண்டை வலியால் அவதைப்படுவர்.இவர்கள் ஒரு ஸ்பூன் அளவு பனங்கற்கண்டை எடுத்து வாயில் போட்டு அதன் உமிழ் நீரை முழுகினாலே போதும் தொண்டை கரகரப்பு தொண்டை வலி நிமிடத்தில் குணமாகும்.
சிலருக்கு சளி பிடிப்பதற்கு முன்பே தொண்டை கரகரப்பு தொண்டை வலி தொண்டையில் கட்டி கொண்டது போல் ஒரு உணர்வு போன்றவை தோன்றும்.அப்போது ஒரு ஸ்பூன் அளவு பனங்கற்கண்டு எடுத்து வாயில் போட்டு அதன் உமிழ் நீரை மூழ்கினாலே போதும் இவை அனைத்தும் நொடியில் குணமாகும் மேலும் சளி பிடிப்பதும் குறையும்.
தொடர் இருமல் மற்றும் சளி பிடித்தவர்கள் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகு சேர்த்து நன்றாக அரைத்து இதில் சிறிதளவு நெய் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் போதும் சளி மற்றும் இருமல் உடனடியாக குறையும்.
குழந்தைகளுக்கு உடல் சோர்வு குறைய,மூளை சோர்வு குறைய மற்றும் கண் பார்வையை அதிகரிக்க 50 கிராம் பனங்கற்கண்டுடன் 50 கிராம் பாதாம் பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து பவுடர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பவுடரை காலை மற்றும் இரவு பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் சோர்வு மூலைச்சோர்வு குறைவதுடன் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் அது மட்டுமின்றி போன்,லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் குறைபாட்டை நெருங்கவே விடாது.
அஜீரண கோளாறு,வயிற்று எரிச்சல் வயிற்று கோளாறு மற்றும் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவோர் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து மென்று அதன் உமிழ் நீரை விளங்கினால் போதும் உடனடி தீர்வு கிடைக்கும்.