நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

Photo of author

By Sakthi

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

Sakthi

நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!

நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 19 வயது உள்ள இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

வினித் குன்வாரியா என்ற 19 வயது நிரம்பிய இளைஞர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். வினித் குன்வாரியா குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் பூங்கா பகுதியில் கர்பா என்னும் நடனப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். இளைஞர் வினித் குன்வாரியா அவர்கள் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆட கர்பா பயிற்சியை உற்சாகமாக மேற்கொண்டு வந்தார்.

பயிற்சியின் பொழுது இளைஞர் வினித் குன்வாரியா அவர்கள் சரிந்து விழுந்தார். மயங்கி விழுந்த இளைஞர் வினித் குன்வாரியா அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு இளைஞர் வினித் குன்வாரியா அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து இளைஞர் வினித் குன்வாரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இவரது திடீர் மரணம் அவருடன் இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த வாரம் ஜுனாகத் நகரில் இதே போல கர்பா நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த 24 வயதுள்ள இளைஞர் ஒருவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சௌராஷ்டிரா மாநிலத்தில் திடீர் மாரடைப்பால் உயிர் இழந்த ஆறாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.