பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!ஊரே சேர்ந்து  செய்த காரியம்!

Photo of author

By Parthipan K

 பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!ஊரே சேர்ந்து  செய்த காரியம்!

Parthipan K

Updated on:

Heart-wrenching incident! What the people of the town did!

பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்! ஊரே சேர்ந்து  செய்த காரியம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் காணப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி  அருகே கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அந்நிலையில் அவரது தாய் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதாவின் தாய் உயிரிழந்த காரணத்தால் திருமணம்மானது நடக்கவில்லை. இவர் தனது பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து  வந்தார்.

சங்கீதாவின் பாட்டி வறுமையில் இருந்தார்.அதனால்  சங்கீதாவிற்கு திருமணம் செய்ய இயலவில்லை. மேலும் பண வசதியும் இல்லாத காரணத்தால் இவரின் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருந்தது.

இதனால் ஊர் பொதுமக்கள் அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் முன்னணியாக கொண்டு இந்தத் திருமணத்தை நடத்தினார்கள். மேலும் திருமணத்திற்கு தேவைப்படும் அனைத்து சீர்வரிசை பொருட்களை வாங்குவதற்கு அந்த பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பாக்கியராஜ் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கினார்.

ஊர் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு செலவை செய்தனர். சங்கீதாவிற்கும் உறவினர்களால் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்து முடிந்தது. மேற்கண்ட சமூக ஆர்வலர்கள் பலர்  அந்த ஊர் பொது மக்களை பாராட்டி வருகின்றனர்.