உடல் சூட்டை தணிக்கும் கம்பு குழி பணியாரம் : சுவையாக எப்படி செய்யலாம்? இதோ பாருங்க..
கம்பு பயன்கள்
கம்பில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனால் கம்பு நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கம்பை உணவில் சேர்த்துக் கொண்டால், அவை நம் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி இரத்ததை சுத்தப்படுத்தும். கம்பில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதனால், நம் தலைமுடி உதிராமல் பாதுகாக்கும். கம்பு தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கம்பு உதவி செய்யும்.
சரி… கம்பு இனிப்பு பணியாரம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 2 கப்
கம்பு – 2 கப்
தேங்காய் துருவல் – சிறிதளவு
பொடித்த வெல்லம் – 2 கப்
எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில், உளுந்து, கம்பு , பச்சரிசி ஆகியவற்றை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இதன் பின்னர், ஒரு மிக்ஸியில் ஊறிய கம்பு, உளுந்து, பச்சரிசியை போட்டு, சிறிது தண்ணிர் தெளித்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, அரைத்த மாவில் வெல்லம் , தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மாவை 15 நிமிடம் அப்படியே மூடி போட்டு வைத்து விட வேண்டும்.
பின்னர், அடுப்பில் பணியார கல்லை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் பணியார மாவினை ஊற்றி இரு பக்கமும் திருப்பி சுட்டு எடுத்தால், சுவையான கம்பு இனிப்பு பணியாரம் ரெடி.