கர்நாடகத்தை புரட்டியெடுக்கும் மழை வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் :

கர்நாடகா :

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடி மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது.கர்நாடகாவில் கனமழை; வெள்ளநீரில் மிதக்கும் பெங்களூரு விமான நிலையம்

இந்த, கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது.

பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் மட்டுமல்லாது கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் இன்று காலை 8.06 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கமானது 5 km ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் சரிவர வெளிவரவில்லை.கர்நாடகாவில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 3.6 ஆக பதிவு

இதுபோன்று கடந்த ஞாயிற்றுகிழமையன்று கர்நாடகாவின் குல்பர்கா நகரில் அன்று காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆக பதிவானது. இது குல்பர்காவில் தொடர்ந்து 2-வது முறையாக நடைபெற்றுள்ள நிலநடுக்கம் என்பதால் மக்களிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Comment