கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

0
210
Heavy rain bleaching districts! Chennai Meteorological Department has reported!
Heavy rain bleaching districts! Chennai Meteorological Department has reported!

கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.அவை நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு கரையை கடந்தது.அதனால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவாட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.மேலும் இந்த விடுமுறையை தொடர்ந்து கல்லூரிகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதனால் திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,ராணிப்பேட்டை ,வேலூர், தர்மபுரி ,சேலம் ,நீலகிரி ,ஈரோடு, கள்ளக்குறிச்சி,  ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleதொடர்ந்து சரிந்து வரும் PPF கணக்கின் வட்டி விகிதம்…திட்டம் பலனை தருமா ?
Next articleபாபா திரைப்படம் ரி-ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!