தென் தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை! அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

0
380
#image_title

தென் தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை! அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகரில் இன்று(டிசம்பர்18) நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது.

குமரிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதே போல விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.

இதையடுத்து தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று(டிசம்பர்18) மற்றொரு அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.

அதாவது விருதுநகர் மாவட்டத்திலும் தற்பொழுது காற்றழுத்தம் காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. மேலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Previous articleரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!
Next articleதென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! இன்று ஆறு இரயில்கள் ரத்து!