கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பருவமழை காரணமாக சில மாதங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் சென்ற புயல் உருவாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.
இன்று மான்டஸ் புயலானது புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்ததை எடுத்து நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டு உள்ளனர்.அதுமட்டுமின்றி புதுச்சேரிக்கு இடையே மாண்டச் புயல் கரையை கடக்க இருப்பதால் புதுச்சேரி டு சென்னை செல்லும் அரசு பேருந்துகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆம்னி பேருந்துகள் இயங்குவது குறித்து அரசு எந்த ஒரு தகவலும் வெளியிடாத பட்சத்தில் வழக்கம் போல் இயங்கும் என கூறியுள்ளனர்.அதேபோல ஆரஞ்சு அலர்ட் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை கன மழை பெய்ய இருப்பதால் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளனர். அத்தோடு நாளை நடக்கவிருந்த தேர்வையும் ஒத்தி வைத்துள்ளனர்.