சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை…
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்ததாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று(ஆகஸ்ட்13) மாலை இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பரவலாக பெய்துள்ளது. சென்னை மற்றும் சென்னையில் உள்ள கொரட்டூர், பாடி, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், போரூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.
மேலும் ஆவடி, வானகரம், பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இதைப் போலவே திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.
நேற்று(ஆகஸ்ட்13) பெய்த கனமழை காரணமாக கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் சுரங்கப்பதையில் மழை வெள்ளம் தேங்கியது. இதையடுத்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதாவது சென்னையில் இருந்து குவைத், துபாய், சார்ஜா ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் உள்பட 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இரவு முழுவதும் சென்னையில் பெய்த கனமழையால் வானிலை மோசமானது. மேலும் பலத்த காற்று வீசியதால் துபாயில் இருந்து சென்னைக்கு வரவிருந்த விமானம் பெங்களூருவில் தரையிரக்கப்பட்டது.