நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை… துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை… 

0
33

நீட் தோல்வியால் மாணவர் தற்கொலை… துக்கம் தாங்கமுடியாமல் தந்தையும் தற்கொலை…

 

நீட் தேர்வு தோல்வியால் மனக் குழப்பத்தில் இருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

 

சென்னை மாவட்டம் குரோம்பேட்டையில் குறிஞ்சி நகரை சேர்ந்த செல்வம் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் சி.பி.எஸ்.சி முறையில் பிளஸ்2 படித்து 424 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

 

மருத்துவராக வேண்டும் என்ற அதிக ஆர்வத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்தார். தொடர்ந்து இரண்டு முறை தோல்வியடைந்த ஜெகதீஸ்வரன் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்குவேன் என்று கூறினார். இதையடுத்து மூன்றாவது முறையாக எழுதும் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கூயோடு இருந்த ஜெகதீஸ்வரன் நீட் பயிற்சி மையத்திற்கு ஆன்லைன் மூலமாக பணம் கட்டியுள்ளார்.

 

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் தன்னுடன்(ஜெகதீஸ்வர்ன்) பயின்ற மாணவர்களில் சிலர் நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் எடுத்தும் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காததால் என்ஜினியரிங் எடுத்து படிக்க சென்றனர். ஒரு சிலர் அதிக பணம் கட்டி நிர்வாக அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி படிக்க சென்றனர்.

 

தன்னுடைய நண்பர்கள் யாரும் நீட் தேர்வு எழுதமாட்டார்கள் என்று மனக்குழப்பத்தில் இருந்தார். விரக்தியில் அடைந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவருடைய அறையில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  பிரேத பரிசோதனை முடிந்து நேற்று(ஆகஸ்ட்13) ஜெகதீஸ்வரன் அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவன் ஜெகதீஸ்வரன் அவர்களுடைய தந்தை செல்வம் அவர்கள் “நீட் தேர்வால் தான் எனது மகன் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டான். இது போல நீட் தேர்வால் மற்ற மாணவர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

 

ஜெகதீஸ்வரன் அவர்களுடைய தாயார் பிரிந்து சென்ற நிலையில் தந்தை செல்வம் அவர்கள் மகன் ஜெகதீஸ்வரன் அவர்களை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தார். மகன் ஜெகதீஸ்வரன் அவர்கள் இறந்ததை தந்தை செல்வம் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உறவினர்களுடன் நேற்று இருந்த செல்வம் திடீரென்று மாயமானதால் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

 

மாயமான செல்வம் கீழே உள்ள வீட்டில் தூக்கு போட்ட நிலையில் இருந்துள்ளார். இதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வம் அவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மகன் ஜெகதீஸ்வரன் இறந்த துக்கத்தை தாங்க முடியாத தந்தை செல்வம் அவர்கள் கீழே உள்ள வீட்டினுள் சென்று சைக்கிள் மீது ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.