வளிமண்டல சுழற்சியின் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் நிலவி வருகிறது இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, ஈரோடு, கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் நாளைய தினம் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது அதேபோன்று அரியலூர், கடலூர், கோவை, நீலகிரி, போன்ற மாவட்டங்களிலும் மற்றும் புதுவை காரைக்காலிலும் நாளை மறுநாள் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது அதேபோல தலைநகர் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மழை பெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பகுதிகளுக்கு வரும் 18ஆம் தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.