ஒரே இடத்தில் நடக்கும் விஜய் & அஜித் பட ஷூட்டிங்… சந்திப்பு நடக்குமா?

0
86

ஒரே இடத்தில் நடக்கும் விஜய் & அஜித் பட ஷூட்டிங்… சந்திப்பு நடக்குமா?

அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்திலும், விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்திலும் நடிக்கிறார்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் அஜித் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்கிய ஹெச் வினோத், அவர் ஐரோப்பா சுற்றுலா சென்றதால் சென்னையில் அஜித் இல்லாத காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். இந்நிலையில் இப்போது அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பியுள்ள நிலையில் விசாகப் பட்டணத்தில் நடக்க உள்ளது.

இதே பகுதியில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பும் நடக்க உள்ளதாம். இதே போல 11 ஆண்டுகளுக்கு முன்னர் மங்காத்தா மற்றும் வேலாயுதம் படத்தின் ஷூட்டிங் அருகருகே நடந்த போது விஜய், அஜித் இருவரும் சந்தித்தனர். அதுபோல இப்போதும் இருவரும் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் ரிலீஸாக உள்ளது.