தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை!! 10 மாவட்டத்திற்கு கடும் எச்சிரிக்கை!!

Photo of author

By Vinoth

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஒரு சில இடங்களில் மிதமாக பெய்தது வருகிறது. இந்த பருவமழை தீவரமடைந்து வருகிறது அதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்க்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது டெல்டா மாவட்டங்களில் கனமழை நேற்று முதல் பொய்து வருகிறது அது நாளை வரை தொடரரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவான காரணத்தால் தமிழகம் மற்றும் கடலோரம் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கபட்டுள்ளது. அதன் படி 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது:

  • தஞ்சை
  • திருவாரூர்
  • நாகை
  • மயிலாடுதுறை
  • புதுக்கோட்டை
  • ராமநாதபுரம்
  • தூத்துக்குடி
  • திருநெல்வேலி
  • சிவகங்கை
  • கன்னியாகுமரி

சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள் ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 24-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களி ல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.