மீண்டும் வேகம் எடுக்கும் கனமழை! அவசர ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர்!

0
147

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் தாக்கம் சற்று குறைந்து வருகின்ற சூழ்நிலையில், நாளைய தினம் முதல் தமிழ்நாட்டுக்கு மறுபடியும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பினார் என்று சொல்லப்படுகிறது, இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று கூட்டப்பட இருக்கிறது.

காணொலிக் காட்சியின் மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் இந்த கூட்டம் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமாகிறது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் அதிகாரிகள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்குவார் என்று சொல்லப்படுகிறது.

Previous articleகோவை மாநாட்டில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Next articleகடல் போல் காட்சி தரும் மேட்டூர் அணை! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!