கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

0
200

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடுவூர் என்ற பகுதியில் மழையால் வீடுகள் இடிந்ததால் 2 பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன.

இதனை அடுத்து பாறைகள் உருண்டு விழுந்ததால் இடிந்த வீடுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக சற்று முன் வெளியான தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இடிபாடுகள் தற்போது அகற்றப்பட்டு வருவதாகவும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பதை மீட்பு பணியினர் கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் இன்று கடலூர், விழுப்புரம், தேனி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையில் மிதமானது முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous articleகனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்
Next articleசிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here