தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

0
88
Heavy rain warning for 11 districts in Tamil Nadu today!!
Heavy rain warning for 11 districts in Tamil Nadu today!!

 

வடதமிழக உள் பகுதிகளில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளி ல் நிலவியது. இது இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கேரள  கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்தனர். இந்த புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Previous articleமூவி ரிவியூவ்-க்கு தடை இல்லை!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
Next articleதோனி கிட்ட மாட்டுன நீ காலி..CSK அணியை சீண்டிய RCB பவுலர்!! கொந்தளித்த சிஎஸ்கே ரசிகர்கள்!!