குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நாகை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் , சென்னை பகுதியை பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த மாதம் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக மழை நீர் வடியாத நிலையில் , மேலும் இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.