தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

0
221

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள சேலம், தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டலத்தை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வட மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் சூறாவளி காற்று 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Previous article10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா? அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!
Next articleகொங்குமண்டலம் அதிமுகவிற்கா…? திமுகவிற்கா…? மல்லுக்கட்டும் தலைமைகள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here