மும்பையில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருகின்றது.கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற மழை இப் பகுதியில் கொட்டி வருகின்றது.கனத்த மழை மட்டுமல்லாது பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது.மும்பை மாநகரில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு மிகக் கனத்த மழை பெய்யும் என்றும்,இது 46ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெய்யும் கனமழை என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் கூறிய வானிலை மையம் அறிவித்துள்ளதாவது ; பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்டில் மும்பையில் 58.52cm தான் மழை பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை மும்பையில் 59.76cm மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை 1 வார காலத்திற்கு மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் மேலும் தீவிரமடையும். என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.