முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச்  சூட்டியுள்ளது!!

0
236

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்து அறிமுகமாகி அதன் பின் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார். தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து மஹா படக்குழு புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தது. வித்தியாசமாக இருந்த இந்த போஸ்டர் நேற்று வைரலானது. அவருக்கு நேற்று 29 வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு ஒன்று கிடைத்திருக்கிறது.

நாசா முதல்முறையாக தமிழ் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி நட்சத்திரம் ஒன்றுக்கு சூட்டியுள்ளார். இதுகுறித்து ஹன்சிகா மோத்வானி கூறியதாவது:முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச்  சூட்டியுள்ளது!!

‘புகழ்பெற்ற ஒருவரை கூகுள் தொடர்பு கொண்டு இந்தப் பெருமையை பெற்றுத்தருவது வழக்கம். நான் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, சினிமாவில் நடித்து வருகிறேன். இதனால் கூகுள் நட்சத்திரம் ஒன்றுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக எனது பெயரை நாசாவுக்குப் பரிந்துரை செய்தது.

விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு செய்து, என் பெயரை ஒரு நட்சத்திரத்துக்கு வைத்துள்ளனர். இந்திய நடிகைகளில் இந்த பெருமையை பெற்ற முதல் நடிகை நான் தான். முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச்  சூட்டியுள்ளது!!

என் பிறந்த நாளுக்கு இதைவிட வேறு என்ன, சிறந்த பரிசாக இருக்க முடியும்? என்று கூறியுள்ளார் ஹன்சிகா. இதையடுத்து ரசிகர்களும் நடிகர், நடிகைகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Previous articleஒருவாரத்திற்கு கனமழை எச்சரிக்கை:? வரலாறு காணாத மழை!
Next articleகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here