பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்து 25 பேர் பலி! மக்கள் பெரும் தவிப்பு!

Photo of author

By Parthipan K

பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்து 25 பேர் பலி! மக்கள் பெரும் தவிப்பு!

மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது.மும்பையை ஒட்டியுள்ள மாஹூல் என்ற மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கிருந்த சுற்று சுவர்கள் இடிந்து வீடுகளில் விழுந்தது.அதில் 17 பேர் உயிரிழந்தனர்,மேலும் 7 பேர் காயமடைந்தார்கள். புறநகர் பகுதியான விக்ரோலியில் ஆறு குடிசைகள் தாறுமாறாக இடிந்து விழுந்தன,அதில் 7 பேர் உயிரிழந்தார்கள்.அதில் இருவர் மட்டும் காயமடைந்தார்கள் மற்றொரு புறநகர் பகுதியில் பாந்துபில் வனத்துறை மற்றும் அலுவலக சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் உயிரிழந்தான்.

இந்தப் பலத்த மழையால் மும்பையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி சரிந்து போயின.இதனால் புறநகர் ரயில் சேவைக் கடுமையாகவேப் பாதிக்கப்பட்டு வந்தனர்.தொலைதூர ரயில்கள்  மும்பைக்கு வெளியே நிறுத்தப்பட்டனர் மும்பையில் இருந்து புறப்படும் பல ரயில்வே சேவைகள் ரத்து செய்து வைக்கப்பட்டுள்ளன.குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் அதிகமாகத் தேங்கி உள்ளதால் மக்களினுடைய இயல்பு நிலைக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 6.30 மணி அளவில் 12 மணி நேரத்தில் மட்டும் 120 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதில் 3 மணி நேரத்தில் 100 மி.மீ மழை பெய்துள்ளது.மும்பையில் பலத்த மழையின் காரணமாக இன்னும்  பலத்த மழைப் பெய்யக் கூடும் என வானிலைஆராய்ச்சிமையம் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.பலத்த மழையின் காரணமாக மக்களிடையே கடும் பீதி நிலவுகிறது.

பலத்த மழையில் சுற்று சுவர் இடிந்து விழுந்த மக்களின் உயிரிழப்புக்கள் பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ளார்,மேலும் குடும்பத்தாருக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாய் என வழங்குவதற்கு அவர் தெரிவித்துள்ளார்.