இணையத்தில் ஆபாச வீடியோ மூலம் சம்பாதிக்க உதவுபவர்கள்! போலீசின் அதிரடி செயல்!

Photo of author

By Hasini

இணையத்தில் ஆபாச வீடியோ மூலம் சம்பாதிக்க உதவுபவர்கள்! போலீசின் அதிரடி செயல்!

மும்பையில் பிகேசி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஒரு புகார் மனு கிடைத்தது. அதில் சமூக வலைத்தளங்களில் இளம் பெண்களை போல பேசி ஆபாச வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை தற்போது கைது செய்து உள்ளனர். அதில் ஒருவர் பெண் என்றும் கூறியுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

அந்த கும்பல் சமூகவலைதளங்களில் பெண்களின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். அதன் மூலம் நல்ல பணம் மற்றும் பின்புறம் உள்ள நபர்களை குறிவைத்து நண்பர்களாக்கி கொள்கின்றனர். மேலும் அவர்களிடம் பெண்களைப் போல பேசி காதலையும், காமத்தையும் நாளுக்குநாள் தொடர்ந்து வளர்க்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களின் செல்போன் கேமராவின் மூலம் அவர்களை ஆபாச செயல்களில் ஈடுபட செய்து அதை பதிவும் செய்து கொள்கின்றனர்.

இவர்கள் செய்யும் செயல்களின் தீவிரம் தெரியாத எதிர்பகுதியில், உள்ள அப்பாவி நபர்கள் இவர்களின் வலையில் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களிடம் மாட்டும் வசதி உள்ள நபர்களை எல்லாம், தான் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆட்டி வைத்து பணத்தை பிடுங்கி வந்துள்ளனர். கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மட்டும் அவர்களிடம் பலர் இவ்வாறு பணங்களை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் 250க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ கிளிப்புகளை பல்வேறு மாநிலங்களில் உள்ள 80க்கும் மேற்பட்டோருக்கு விற்று இந்த கும்பல் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இந்த கும்பலிடம் பல முக்கிய புள்ளிகள் சிக்கி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக நாக்பூர், உத்தரப்பிரதேசம், ஒடிசா போன்ற இடங்களில் பதுங்கி இருந்த ஐந்து பேரை பிடித்து போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்ற நோக்கிலும் விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இதன் காரணமாக மக்களை போலீசார் இணையதளங்களை உபயோகிக்கும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும் என்றும், சம்பந்தம் இல்லாத வெளி நபர்களிடம் அளவாக பேசவும் வலியுறுத்துகின்றனர்.