வெளியானது நடிகை சித்திராவின் தற்கொலைக்கான உண்மையான காரணம்!

Photo of author

By Sakthi

தொடரில் எடுக்கப்பட்ட காட்சியால் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் ஹேமந்த் மற்றும் சித்ரா இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு அவரை தற்கொலை வரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகை சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எதிரும் புதிருமாக இருந்த கதிர், முல்லை ஜோடி இடையே காதல் வர இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ ஆரம்பிப்பது போன்ற காட்சிகள் கட்டப்பட்டு இருந்தன.

அதோடு இருவருக்கும் இடையில், கட்டிப்பிடிப்பது, முத்தக்காட்சி, போன்ற மிக நெருக்கமான காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஹேமந்த் மற்றும் சித்ராவிற்கு இடையே முதலில் சிறு சிறு அளவில் ஆரம்பித்த தகராறு நாட்கள் செல்ல செல்ல சித்ராவின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டது ஆகவே ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு வந்து சித்ராவின் படப்பிடிப்பு தளத்தில் சண்டையிடுவார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.

நடிகை சித்ரா அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை ஹேமந்த் இடம் தெரிவிக்க முயற்சி செய்தபோதும், அவர் பேசிய வார்த்தைகள் சித்ராவிற்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட கடந்த ஒன்பதாம் தேதி அன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நடிகர்களுடன் டிக் டாக் செய்த வீடியோ மற்றும் அவர் சிரித்து மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் நெருக்கமாக நடித்த காட்சிகளை சுட்டிக்காட்டி பிரச்சனையை செய்திருக்கின்றார் ஹேமந்த்.

நடிகை சித்ராவிடம் அவர்களுடைய நண்பர்கள் பலமுறை ஹேமந்த் தொடர்பாக அவருடைய உண்மையான குணத்தை பற்றி தெரிவித்தும் அனைத்து நண்பர்களிடமிருந்தும் சித்ரா விலகி இருக்கின்றார். அதே சமயத்தில் தன்னுடைய பிரச்சனையை பெற்றோர்களிடமும் கூற இயலாமல் தவித்து இருக்கின்றார்.

தகராறின் இடையே ஒரு கட்டத்திற்கு மேல் ஹேமந்த் இதுபோல நடிப்பதற்கு செத்துப் போய் விடு என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கின்றார், என்று காவல்துறையின் விசாரணையில் தெரிவித்தார் ஹேமந்த். இதற்கு பின்னர்தான் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார் நடிகை சித்ரா அதன்பின்னர் தான் தற்கொலை முடிவை எடுத்து இருக்கின்றார்.

அதேபோல இதற்கு முன்னரே ஒரு முறை திருமணம் நின்றதை போல இப்பொழுதும் நின்று விடுமோ? என்ற பயமும் சித்ராவிற்கு இருந்ததாக தெரிய வருகின்றது. அதோடு சித்ராவின் கணவரிடம் தொடர்ச்சியாக ஆறு தினங்கள் நடத்திய விசாரணைக்குப் பிறகு சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் நேற்றைய தினம் இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 15 நாட்கள் காவலில் வைத்து மந்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.