இனிமேல் இதுதான் கட்டணம் வெளிவந்த புதிய அரசாணை!! தனியார் பள்ளிகளுக்கு  தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  

Photo of author

By Amutha

இனிமேல் இதுதான் கட்டணம் வெளிவந்த புதிய அரசாணை!! தனியார் பள்ளிகளுக்கு  தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்துக்கான புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விகிதங்களை அரசு தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டப்படி தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு வரை கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அதற்கான புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு 6000 கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு 12076 ரூபாய் கல்வி கட்டணமாக இருந்து வந்தது. அதை தற்போது உயர்த்தி 12659 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது.

மேலும் 6 முதல் 8 வகுப்பு வரை கடந்த ஆண்டு வரை 15 ஆயிரத்து 711 ரூபாயாக இருந்த பழைய கட்டணம் தற்போது 16 ஆயிரத்து 477 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கட்டணம் ஆனது 2026 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருக்கும். இந்த கட்டண நிர்ணயம் தனியார் பள்ளிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு கட்டண குழு நிர்ணயிக்கும் கல்வி கட்டணத்தில் பாதியை தான் அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு பயன்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கல்வி கட்டணத்தால் பெற்றோர்களிடமிருந்து அதிகளவு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தனியார் பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன.