இனிமேல் பாஜக கொண்டு வந்த இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !!
ஆட்சியில் உள்ளபோது பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் இனிமேல் செல்லாது என காங்கிராஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுப்பற்றி கூறப்படுவதாவது,
கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து அமல்படுத்தியது . முதலில் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது பின்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் பல மாநிலங்கள் கர்நாடக மாநிலத்தை பின்பற்றி மதமாற்ற தடைசட்டத்தை கொண்டு வந்தன.
இந்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. சிறுபான்மையினர் இந்த சட்டத்தின் மூலம் துன்புறுத்தவே அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக சித்தராமையா குற்றம் சாட்டி இருந்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் கட்டாயம் நீக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பல்வேறு மாற்றங்களை காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த மதமாற்ற தடை சட்டம் ரத்து செய்யப்படுகிறது.
இதையடுத்து முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் முந்தைய பாஜக கொண்டு வந்த மதமாற்ற தடைச்சட்டம் திரும்ப பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. அடுத்ததாக 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் பற்றிய பாடத்திட்டம் நீக்கப்படுவதாகவும், விவசாய சட்டம் அமைப்பதற்க்கான சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது என அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
அரசின் இந்த சட்டத்தினால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.