கோடையில் தயிர் புளிக்காமல் பிரஸாக இருக்க.. அசத்தல் டிப்ஸ் இதோ!!

Photo of author

By Divya

கோடையில் தயிர் புளிக்காமல் பிரஸாக இருக்க.. அசத்தல் டிப்ஸ் இதோ!!

Divya

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருள் தயிர்.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.தயிரை பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தயிர் சாப்பிடலாம்.சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள தயிர் சாப்பிட வேண்டும்.தயிரில் இருக்கின்ற நல்ல பாக்டீரியா வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும்.இப்படி பல நன்மைகள் கொண்டிருக்கும் தயிர் பிரஸாக இருந்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.

ஆனால் வெயில் காலத்தில் தயிர் பிரஸாக இருப்பது கடினம்.அதிக வெப்பத்தால் எளிதில் தயிர் புளித்துவிடும்.எனவே இந்த வெயில் காலத்தில் தயிர் புளிக்காமல் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

வெயில் காலத்தில் தயிர் புளிக்காமல் இருக்க டிப்ஸ்:

1)குளிர்ச்சி நிறைந்த இடத்தில் தயிரை வைக்க வேண்டும்.இப்படி செய்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்.

2)பிளாஸ்டிக் பாத்திரத்தில் தயிர் போடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் தயிரில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்துக் கொண்டால் அவை சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.

3)தயிர் எடுக்க பயன்படுத்தும் கரண்டியை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.தயிர் போடும் பால் பிரஸாக இருந்தால் சீக்கிரம் தயிர் கெடாமல் இருக்கும்.

4)உறைமோர் அதிகம் புளிக்க கூடாது.அதிகம் புளித்த உறைமோர் கொண்டு தயிர் தயாரித்தால் அவை சீக்கிரம் கெட்டுவிடும்.

5)அதேபோல் அதிக வாசனை நிறைந்த பொருட்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக பூண்டு,வெங்காயம்,மசாலா பொருட்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.