சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அடியோடு நீக்கும் சிம்பிள் டிப்ஸ் இதோ!!
பெண்களே உங்களில் பலருக்கு கை,கால்,உதட்டிற்கு மேல் அதிகளவு முடிகள் இருக்கும்.இதனால் தங்கள் மேனி அழகு குறைந்து விடும்.எனவே சருமத்தில் வளர்ந்துள்ள முடிகளை அகற்ற கீழே கொடுக்கபட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.
1)கொண்டை கடலை
2)பன்னீர்
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 25 கிராம் கொண்டைக்கடலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.2 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து கொண்டை கடலையை நன்கு ஆற விடவும்.
பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.இந்த பவுடரை ஒரு கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு பன்னீர் ஊற்றி நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.
இந்த பேஸ்டை உடல் முழுவதும் பூசி 1/2 மணி நேரம் கழித்து குளிக்கவும்.இவ்வாறு செய்தால்
உடலில் உள்ள தேவையற்ற முடிகள் முழுமையாக நீங்கி விடும்.
1)மைசூர் தால்
2)முல்தானி மெட்டி
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி மைசூர் தால் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
இந்த பவுடருடன் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.பிறகு அதில் தேவையான அளவு பன்னீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.இந்த பேஸ்டை உடல் முழுவதும் பூசி 1/2 மணி நேரம் கழித்து குளிக்கவும்.இவ்வாறு செய்தால் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் முழுமையாக நீங்கி விடும்.
1)சர்க்கரை
2)எலுமிச்சை
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு இதை உடலில் உள்ள தேவையற்ற முடிகள் மீது அப்ளை செய்யவும்.
10 முதல் 15 நிமிடங்களுக்கு பின்னர் அவ்விடத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.