வீட்டு கழிவறை மற்றும் சமையலறை பைப்புகளில் படிந்துள்ள அழுக்கு,எண்ணெய் பிசுக்கு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
1)பேக்கிங் சோடா
2)தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா(சமையல் சோடா) இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை சமையலறை மற்றும் கழிவறை பைப்புகளில் தடவி அரை மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.பிறகு ஒரு பிரஸ் கொண்டு பைப்பை தேய்த்தால் அழுக்கு,பாசிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
1)வெள்ளை வினிகர்
2)பேக்கிங் சோடா
ஒரு கிண்ணத்தில் வெள்ளை வினிகர் இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை சமையலறை மற்றும் கழிவறை பைப்புகளில் தடவி அரை மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.பிறகு ஒரு பிரஸ் கொண்டு பைப்பை தேய்த்தால் அழுக்கு,பாசிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
1)எலுமிச்சை சாறு
2)கல் உப்பு
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.இதை வீட்டு பைப்புகளில் ஊற்றி ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால் அழுக்கு,எண்ணெய் பிசுக்கு அனைத்தும் நீங்கிவிடும்.
1)எலுமிச்சை சாறு
2)பேக்கிங் சோடா
எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்துவிடவும்.இதை வீட்டு பைப்புகளில் ஊற்றி ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால் அழுக்கு,எண்ணெய் பிசுக்கு உள்ளிட்டவை நீங்கிவிடும்.