இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா?

0
143
Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!
Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

 இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா?

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போன்ற சிறப்பான நாட்களில் போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இம்முறை சிறப்பான போக்குவரத்து சேவையை மக்களுக்கு அளித்ததில் போக்குவரத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்குவதாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை அளிப்பதில் போக்குவரத்து கழகம் முக்கிய பங்கை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள் தான் அதிக அளவு பயணிகளை அதிக அளவில் பேருந்து பயன்பாடு ஆகியவற்றில் உயர்ந்து காணப்படுகிறது. சிறு கிராமங்கள் முதல் பெரு மாநகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சேவை சீராக இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு என அனைத்து நிறுவனங்களிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்கும் மேலாக பணி புரிந்தவர்களுக்கு 85 ரூபாயும், 156 நாட்களுக்கு அதிகமாக பணி புரிந்தவர்களுக்கு 195 ரூபாய், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர் களுக்கு 625 ரூபாய் என கூறியுள்ளனர்.

Previous article10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை!
Next articleபாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்