காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்!
கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வைத்து அவதிப்படும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.னாம் கடைகள்,வங்கிகள் என பல இடங்களில் ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போது கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கவனிக்காமல் வாங்கிவிடுவது வழக்கம்.அவ்வாறு வாங்கும் பொழுது அந்த நோட்டுக்களை திரும்ப மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருவோம்.அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு தற்பொழுது ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடைகள்,பெட்ரோல் பங்குகள் போன்றவற்றில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் வாங்கியிருந்தால் அதனை வங்கிக்கு எடுத்து சென்று மாற்றிக்கொள்ளலாம்.அந்த ரூபாய் நோட்டு எந்த அளவிற்கு கிளந்துள்ளதோ அந்த அளவிற்கு அதன் மதிப்பு குறைந்து வேறொரு மாற்று ரூபாய் நோட்டு வழங்கப்படும்.இவ்வாறு மக்கள் தங்கள் கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.அதுமட்டுமின்றி ஓர் சிலருக்கு ஏடிஎம்மற்றும் வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதே ரூபாய் நோட்டுக்கள் கிழிந்திருக்கும்.அவ்வாறு கிழிந்து காணப்படும் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளுக்கு எடுத்து சென்றால் உடனடியாக மாற்றி தர மாட்டார்கள்.
அவ்வாறு எடுத்து செல்லும் போது சில ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும்.நீங்கள் ஏடிஎம் போன்றவற்றில் எடுக்கும் பொழுது பணம் கிழிந்திருந்தால் அந்த பணம் எடுத்ததற்கான ரசீது மற்றும் உங்கள் அக்கவுன்ட் புக் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும்.அதுமட்டுமின்றி பணம் எடுதவுடம் உங்கள் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்தியையும் சமர்பிக்க நேரிடும்.அதனால் அதனை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.இந்த ஆவணங்களை எடுத்து சென்றால் ரூபாய் நோட்டு கழிந்திருந்தாலும்அதன் மதிப்பு குறையாமல் மாற்றி தருவார்கள்.இதுமாதிராயன குறிப்புகளை தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.பணம் கிழிந்து மாற்ற முடியாமல் அவதிப்படும் மக்களுக்கு இந்த ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள் பயனுள்ளதாக இருக்கு ம்.