இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!
தற்பொழுது கொரோனா தொற்றை அடுத்து குரங்கு அம்மை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்தவகையில் விலங்குகளிடமிருந்து ஏதேனும் தொற்றானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கேரளாவில் வயநாடு பகுதியில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து வந்துள்ளது. தொடர்ந்து இறந்து வந்ததையடுத்து ,அதன் மாதிரிகளை எடுத்த சோதனை செய்ததில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
மீதமுள்ள பன்றிகளுக்கு அந்த தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அந்தப் பண்ணையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பன்றிகளை கொள்ள அரசாங்கம் உத்தரவிட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு ஒரு வித தோல் கழலை எனப்படும் நோய் பாதித்துள்ளது. இந்த தோல் நோயால் குஜராத் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது. குறிப்பாக சூரத் ,ராஜ்கோட் ஆரவல்லி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததாக கூறுகின்றனர்.
உயிரிழப்புகள் அதிகரித்து விட்டதால் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கால்நடை மருத்துவ குழுவை அவ்வரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பணியானது அந்த கிராமத்தில் உள்ள கால்நடைகளை கண்காணித்து தடுப்பூசி செலுத்துவது ஆகும். அந்தப் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தோல் நோயானது கொசுக்கள் ஈக்கள் ஆகியவற்றாலும் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவுகளில் இருந்து விலங்குகளுக்கு பரவுவதாக கூறுகின்றனர். மற்ற கால்நடைகளை இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க குஜராத்தில் இருந்து எந்த கால்நடையும் வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்ல கூடாது என்று தடை விதித்துள்ளனர். இந்தத் தோல் நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என தெரிவித்துள்ளனர்.