கட்சி தலைவர் அதிரடி! என்னுடன் செல்ஃபி எடுத்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்! தொண்டர்கள் ஷாக்?

0
218

மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என்னுடன் செல்ஃபி எடுக்க கூடாது. சால்வை போடக்கூடாது. அப்படி மீறி செய்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டார். அவர் நாடாளுமன்ற அவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அவையில் மோடி அரசின் பல கொள்கைகளை எதிர்த்து பேசியுள்ளார். முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து போன்ற மசோதாக்களை எதிர்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவையில் பேசிய அவர், நான் ஒரு தேச குற்றவாளி, இதை கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். ஆம், 2009 இல் திமுக தலைவர் கருணாநிதி தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் என் மீது வழக்கு தொடுத்தார். இதனால் இந்த வருடம் சென்னை சிறப்பு நீதி மன்றம் எனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்போதும் நான் 124ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி என கூறினர்.

பாலகங்காதர திலகரும், அரவிந்த் கோசும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். காந்தி இந்த 124ஏ பிரிவை கடுமையாக விமர்சித்தார் என அவர் அவையில் கூறினார்.

மேலும் அவர் கட்சி சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இனி என்னுடன் யாரும் செல்ஃபி எடுக்க வேண்டாம் அப்படி எடுக்கும் பட்சத்தில் செல்ஃபி எடுப்பவர்கள் 100 கட்டணம் கொடுத்துவிட்டு செல்ஃபி எடுக்கவேண்டும் எனவும். மேலும் எனக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டாம். அப்படி சால்வை அணிவித்து மரியாதை செலுத்த நினைப்பவர்கள் கட்சிக்கு புத்தகங்களை கொடுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் கட்சியில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடவேண்டும். பழைய உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் ஆயுள் உறுப்பினர் ஆக புதுப்பித்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இனி வைகோவிடம் யாருமே செல்ஃபி எடுக்க தயங்குவர். கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் வைகோ இறங்கிவிட்டார் என அனைவரும் கூறுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleதெறிக்கவிடும் நேர்கொண்டபார்வையின் டிவிட்டர் கருத்துக்கள்! தல தலதான்! விமர்சனங்கள் உள்ளே!
Next articleஇந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..?