இங்கே மீண்டும் ஒரு அதிர்வு! இப்படியே போனால் தாங்குமா உலகம்?

0
86
Here's a vibe again! Will the world endure if it goes like this?
Here's a vibe again! Will the world endure if it goes like this?

இங்கே மீண்டும் ஒரு அதிர்வு! இப்படியே போனால் தாங்குமா உலகம்?

தற்போது உலகத்தின் அழிவு காலம் போல. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு இயற்கை நிகழ்வுகள் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டே இருக்கின்றன. உலகின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள், சில பகுதிகளில் கனமழை, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எனவும், சில பகுதிகளில் அளவு கடந்த அளவில் நிலநடுக்கங்கள் மேலும் சில பகுதிகளில் மேகங்கள் சிதறி ஏற்பட்ட மழையினால், ஏற்பட்ட உயிரிழப்புகள் பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் பல இயற்கை ஆபத்துக்கள் மக்களை நம்மை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இவை அனைத்திற்கும் ஒரே காரணம் உலகம் வெப்பமயமாதலே ஆகும். இதற்கு தான் அறிவியலாளர்கள் மரங்களை நடுவோம், மரம் வளர்ப்போம் என்று குரலெடுத்து கூறிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் நாமோ கிடைத்த மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்துக் கொண்டே போகிறோம். அதன் தாக்கமே தற்போது நாம் சந்தித்து வரும் இயற்கை அழிவுகள் எல்லாம்.

இதில் நாளொன்றுக்கு எவ்வளவு மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே உலகத்தின் ஏதோ ஒரு பகுதியில் அதிகபட்ச ரிக்டர் அளவில் நில நடுக்கங்கள் பதிவாகிக் கொண்டே வருகின்றன. நேற்று முன்தினம் கூட அலாஸ்கா பகுதியில் 8.2 அளவு பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து அலாஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கையும் அரசு விடுத்து இருந்தது.

இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் படி  அறிவுறுத்தப்பட்டனர். எனினும் இதனால் பெரிய அளவில் மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கெல்லாம் எச்சரிக்கை வாபசும் பெறப்பட்டது. அமெரிக்காவின் மாகாணத்தின் அலாஸ்கா என்ற நகரிலிருந்து தென்கிழக்கே 146 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 8.30 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 44.9 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனவும் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அலாஸ்காவின் பெர்ரிவில்லே என்ற பகுதியில் 91 கிலோமீட்டர் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினமும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பசிபிக் ரிங் ஆஃப் பயர் பகுதியில் அலாஸ்கா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. எனினும் அடுத்தடுத்த நாட்களில் அங்கு தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.