கேரளாவை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான மாளவிகா மோகனன் சமீப காலமாகவே தன்னுடைய சர்ச்சை கருத்துக்களால் பிரபலம் ஆகிறது. ஏற்கனவே தென்னிந்திய திரை உலகில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் நடிகைகளின் தொப்புள்களை காட்ட விரும்புவதாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்து மூலம் விமர்சனங்களை பெற்று வருகிறார்.
நடிகை மாளவிகா மோகனன் பேசியிருப்பதாவது :-
வெளியுலகிற்கு பெண்ணியவாதிகள் போல் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் மற்றும் ஹீரோக்கள் உண்மையில் ஆணாதிக்க வாதிகள் என்றும் வெளியில் மட்டுமே அது போன்று நடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதாவது, திரைப்படத்துறையில் இருக்கக்கூடிய இந்த சமத்துவமின்மை எந்த காலத்திலும் முடிவுக்கு வராது என்றும் பெண்களை சமமாக பார்க்கக் கூடியவர் மிகவும் முன்னோக்கு சிந்தனை கொண்டவராக இருக்கிறார் என்றும் பெண்ணியவாதி போல நடந்து கொள்ளக் கூடியவர்கள் என்னென்ன வார்த்தைகளை சொல்ல வேண்டும் என வெளியுலகத்திற்காக யோசித்து பேசுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் யாரும் இல்லாத இடத்தில் அவர்கள் எப்படி பெண் வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியதோடு திரையுலகில் உள்ள நடிகர்களின் கோபத்தையும் பெற்று வருகிறது.