பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் குடும்பத்திலிருந்து ஹீரோயினா?

0
316

பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் குடும்பத்திலிருந்து ஹீரோயினா?

தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இரண்டு பெண்கள் தான் இரண்டு பெண்களுக்கும் ஆண் பிள்ளைகளாக இருப்பதால் அவருக்கு இரண்டு பேரன்கள் தானே இருக்கிறார்கள். பேத்தி இல்லையென்று நினைக்கிறீர்களா..? நாங்கள் சொல்ல வருவது கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார் பற்றி.

சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தி வைத்திருந்தாரே கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், அவரது குடும்பம் மிகப்பெரியது. அந்தக் குடும்பத்திலுள்ள பெரும்பாலோனோர் நடிகர்கள்தான். ராஜ்குமாரின் தந்தை சிங்கநல்லூரு புட்டஸ்வாமி ஒரு நடிகர். ராஜ்குமாரின் ஐந்து மகன்களுமே நடிகர்கள்தான். அவரது மருமகனும் ஒரு நடிகர்தான். ராஜ்குமாரின் இன்னொரு மருமகனும் (மைத்துனரின் மகனும்) நடிகர்தான். இதில் ராஜ்குமாரின் மகன்களான சிவ ராஜ்குமாரும் புனித் ராஜ்குமாரும் கன்னடத் திரையுலகில் தற்போது தவிர்க்கமுடியாத நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆக, கன்னட திரையுலகில் ஒரு வருடத்தில் ராஜ்குமார் குடும்பம் சேராத நபர்கள் நடித்திருக்கும் சினிமா பார்க்கவேண்டும் என நினைத்தால் அது உங்களால் முடியவே முடியாது. நிலைமை இப்படியிருக்க, தற்போது ராஜ்குமாரின் பேத்தி தான்யாவும் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். 

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பாட்டன், தாத்தா, ஐந்து தாய் மாமாக்களுக்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாக ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து பெண் ஒருவர் நடிக்க வந்திருக்கிறார். ராஜ்குமாரின் மகள் பூர்ணிமாவின் மூத்த மகள்தான் இந்த தான்யா ராஜ்குமார்.

மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

மேலும் படிக்க : பாஜக தலைவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

கமலின் உத்தம வில்லன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுமன் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தில்தான் தான்யா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். ரொமான்டிக் காமெடியாக உருவாக இருக்கும் படத்தின் பெயர் ‘நின்னா சனிஹகே’. இவருடன் தான்யாவின் தம்பி தீரணும், ‘தாரி தப்பிடா மகா’  என்ற படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆகவிருக்கிறார்.

மேலும் படிக்க : அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

ஆனா, விதை அவர் போட்டது..!

மேலும் படிக்க : யார் இந்த பையன்? இவருக்கு இப்படி ஒரு பையனா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous article1010 ஆண்டுகளுக்கு முன்னரே மழை நீர் சேகரிப்பு திட்டத்தை பயன்படுத்திய மன்னர் ராஜராஜ சோழன்
Next articleபாட்டாளி மக்கள் கட்சியா? மத்திய அரசா? 8 வழிசாலை உச்சநீதி மன்றம் அதிரடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here