இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜீவி பிரகாஷ் அவர்களும் அவருடைய மனைவி சைந்தவி அவர்களும் விவாகரத்து பெற்று தற்பொழுது பிரிந்து வாழ்கின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரிந்து வாழ்ந்தாலும் இசை உலகில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தான் வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சைந்தவி அவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சி மேடையில் தான் விழுந்தால் தன்னை தாங்கிப் பிடிக்க இவர் இருக்கிறார் என பாடகி சைந்தவி அவர்கள் தெரிவித்திருப்பது ரசிகர்களை வருத்தப்பட வைப்பதாக அமைந்திருக்கிறது.
நிகழ்ச்சி மேடையில் சைந்தவி அவர்கள் பேசியதாவது :-
நிகழ்ச்சிக்கு சைந்தவி அவர்களின் அண்ணன் கலந்து கொண்டு தங்கள் வீட்டின் செல்லப்பிள்ளை சைந்தவி தான் என்றும் தற்பொழுது அவருக்கு ஒரு குழந்தை இருந்தாலும் எங்களுக்கு எப்பொழுதுமே சைந்தவி ஒரு குழந்தை தான் என்றும் தெரிவித்ததை தொடர்ந்து, தன் அண்ணனை கட்டி அணைத்த படி பின்னணி பாடகி சைந்தவி அவர்கள் கண்ணீருடன் தான் பின்னாடி விழுந்தால் தன்னை தாங்கி பிடிப்பதற்காக தன்னுடைய அண்ணன் அண்ணி என அனைவரும் இருப்பதாகவும் இப்படி ஒரு குடும்பத்தில் தான் பிறந்ததற்கு கடவுளுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
திருமண வாழ்க்கையில் பின்தங்கிய பொழுதும் பிறந்த வீட்டில் தனக்கான அன்பும் ஆதரவும் இருப்பதால் தான் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களை கண்கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது.