‘ஹே கூகுள்’உடனே வந்து நிற்கும்!பொது மக்கள் ஆர்வம்!
அன்றாட தேவைகளில் முக்கிய பங்கு வகிப்பது ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான். இந்த மொபைலில் எதை எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு மிகவும் உதவியாக இருப்பது கூகுள். மேலும் கூகுள் அன்றாடம் நமக்கு தேவையான செய்திகளை வழங்குவது முதல் மளிகை பொருட்களை வாங்குவது குறித்து நினைவூட்டுவது வரை எண்ணற்ற சேவைகளை கூகுள் அசிஸ்டெண்ட் வழங்குகிறது.கூகுள் அசிஸ்டெண்டை நீங்கள் ‘ஹே கூகுள்’ என்று அழைத்தால் போதும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்யும். இந்த ஹே கூகுள் என்பதை கூட உங்கள் விருப்பப்படி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். மேலும் உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்ற தகவல்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். நாடு அல்லது இந்த உலகம் என எங்கு நடக்கும் நிகழ்வுகள் என்றாலும் கூட, அதுகுறித்து உங்களுக்கு படிக்க நேரமில்லை என்றால் கூகுள் அசிஸ்டெண்ட் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் தொடங்கும் பொழுது சாதாரணமாக நீங்கள் குட் மார்னிங் என்று சொன்னால் போதும். உலகில் என்னென்ன நடைபெற்றுள்ளது என்ற விவரங்களை கூகுள் அசிஸ்டெண்ட் பட்டியல் போட்டு காட்டும்.விர்ச்சுவல் வசதி கொண்ட கூகுள் அசிஸ்டெண்ட் டிவைஸில் ஜிபிஎஸ் வசதியும் இயங்குகிறது. நீங்கள் நினைத்த இடத்திற்கு சென்று சேருவதற்கான மிக சிறப்பான வழித்தடத்தை இது காண்பிக்கிறது. நேவிகேஷனுக்கான வாய்ஸ் கமாண்ட் ஆன் செய்து விட்டு, விரைவான மற்றும் சுலபமான வழியில் நீங்கள் பயணிக்க முடியும்.
அலாரம் வைப்பது இதில்
தினசரி அலாரம் வைத்துக் கொள்ளும் வசதியும் கூகுள் அசிஸ்டெண்ட் டிவைசில் இருக்கிறது. நம் அன்றாட திட்டமிடல்களை பின்பற்றுவதற்கு இது உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் நேரத்தை நீங்கள் குறிப்பிட்டு விட்டால், நமக்கு தூக்கத்தை வர வழைக்கும் வகையில் ரிலாக்ஸான மியூஸிக்கை கூகுள் அசிஸ்டெண்ட்லில் ஒலிக்கும். அதேபோன்று காலையில் நம்மை புத்துணர்ச்சியுடன் எழுப்பி வைக்கும்.மேலும் நமது முக்கியமான விஷயங்கள் அல்லது நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுவதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் உதவியாக இருக்கும். எந்த நாளில், எந்த நேரத்தில் எங்கு சென்று நிகழ்ச்சியில் அல்லது விழாவில் பங்கேற்கப் போகிறோம் என்பதை நீங்கள் செட் செய்து விட்டால், அதுகுறித்து உங்களுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் நினைவூட்டும். இதேபோன்று ஒவ்வொரு வார இறுதியிலும் உங்களுக்கு மளிகை பொருள் வாங்க வேண்டும் என்பதை கூட இது நினைவூட்டி சொல்லும். மேலும் சரியான நேரத்தில் நினைவூட்டும். இதுபோன்ற எண்ணற்ற புதிய அப்டேட்கள் கூகுள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.